தங்காலையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற பிரதி அமைச்சர் ருவன் செனரத், அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு மேலும் ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும் என தெரிவித்துள்ளார்.
அரிசிக்கான தட்டுப்பாடு மற்றும் பொருட்களின் விலையின்மேல் தொடர்ந்து, மக்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
நாங்கள் ஆட்சியைப் பொறுப்பேற்ற போது, பெரும்பாலான நெற் களஞ்சிய சாலைகள் தனியாரின் கட்டுப்பாட்டில் இருந்தன. இந்த பிரச்சினைக்கு முன்னைய அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று அவர் கூறினார்.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வை சமாளிக்க, தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர் உறுதியளித்தார்
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1