Pagetamil
இலங்கை

மனைவியை சுட்டுக்கொல்ல துப்பாக்கியுடன் தலைமறைவான திருகோணமலை கடற்படை சிப்பாய் கைது!

தனது மனைவியை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று தானும் கொலை செய்யும் நோக்கில் வரகாபொல வாரியகொட பிரதேசத்தில் இருந்து தப்பிச் சென்ற கடற்படை சிப்பாய் ஒருவர் நேற்று (25) காலை நாரம்மல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக வரக்காபொல பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை கடற்படை முகாமில் பணியாற்றிய கடற்படை வீரர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 24ஆம் திகதி திருகோணமலை கடற்படை முகாமில் இருந்து வெலிசறை கடற்படைத் தளத்திற்கு சீருடைப் பொதியை ஏற்றிச் சென்ற டிரக்கில் சாரதியுடன், பாதுகாப்பு உத்தியோகத்தராக சென்ற கடற்படை வீரரே தலைமறைவாகியிருந்தர்.

இருவரும் வெலிசறைக்கு வந்து கொண்டிருந்த போது, ​​பாதுகாப்பு கடமையில் இருந்த கடற்படை சிப்பாய், தனது வீடு நாரம்மல பிரதேசத்தில் இருப்பதாகவும், அவர்களுக்கு அறிவித்து இரண்டு உணவுப் பொட்டலங்களை வாரியகொட பிரதேசத்திற்கு கொண்டு வர முடியுமென்றும் சாரதியிடம் கூறினார்.

வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு விட்டு தொடர்ந்து பயணிக்க முடிவு செய்த இருவரும்,  வரக்காபொல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலவ்வ வாரியகொட பழைய பாலத்திற்கு அருகில் பாரவூர்தியை நிறுத்தியுள்ளனர்.

உணவுப்பொதிகளை எடுத்து வருவதாக குறிப்பிட்டு, பாதுகாப்பு சிப்பாய் துப்பாக்கியுடன் புறப்பட்டார். அவர் நீண்டநேரமாக திரும்பவில்லை. அவர் திரும்பும் வரை பல மணித்தியாலங்கள் சுற்றித் தேடிய பின்னர், சாரதி வரக்காபொல பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

உத்தியோகபூர்வ சீருடை அணிந்து தனது உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் ட்ரக்கில் இருந்து இறங்கிய சந்தேக நபர், வாரியகொட பிரதேசத்தில் இருந்து முச்சக்கர வண்டியில் ஏறி நாரம்மல பிரதேசத்தில் வசிக்கும் தனது பிரிந்த மனைவியின் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி வீட்டில் இல்லாததை அறிந்த அவர் இரவு அந்த இடத்திற்கு வரும் வரை அருகிலிருந்த வனப்பகுதியில் தங்கியிருந்ததாக சந்தேக நபர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

வரக்காபொல பொலிஸ் அதிகாரிகளுக்கு வழங்கிய வாக்குமூலங்களின்படி, சந்தேகநபரும் அவரது மனைவியும் சட்டரீதியாக பிரிந்துள்ளதாகவும், அவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருப்பதாகவும், சந்தேகநபர் தனது மனைவிக்கு மாதாந்தம் தாபரிப்பு பணம் வழங்குவதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்கிடையில், டிரக்கின் சாரதி தனது தலைமையக அதிகாரிகளை தொடர்பு கொண்டு, சம்பவம் குறித்து புகாரளித்த பின்னர், கடற்படையினர் சந்தேக நபரின் வீட்டிற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தனர். அதேநேரம், அதே பகுதியில் வசிக்கும் சந்தேகநபரின் சகோதரர், சந்தேகநபரை தொடர்பு கொண்டு, அவர் குற்றத்தை செய்துள்ளதாகவும், இது தொடர்பில் கடற்படையினர் அவரது வீட்டிற்கு வருவார்கள் எனவும் தெரிவித்தார்.

பின்னர் சந்தேகநபர் தனது சகோதரரின் வீட்டில் தங்கியிருந்த போது கடற்படையினர் துப்பாக்கியை கைப்பற்றி சந்தேக நபரை நாரம்மல பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

முன்னாள் சிப்பாய் குடும்பத்துடன் உண்ணாவிரதம்!

Pagetamil

எரிந்த வண்டியிலிருந்தது கோடீஸ்வர வர்த்தகரின் சடலமா?

Pagetamil

மஹிந்த மீது ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் முயற்சியா?; புதிதுபுதிதாக கதைவிடும் ராஜபக்ச குழு: அரசாங்கம் விளக்கம்!

Pagetamil

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

Leave a Comment