25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
கிழக்கு

திருக்கோணமலையில் சுனாமி நினைவேந்தல்

இன்றைய தினம் சுனாமி அனர்த்தத்தினை முன்னிட்டு திருகோணமலை மூதூர் தக்வாநகரில் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது.

சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு இன்றுடன் 20 வருட பூர்த்தியானதை முன்னிட்டு சுனாமி அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு திருகோணமலை மாவட்டத்திற்கான பிரதான நினைவேந்தல் நிகழ்வு மூதூர் – தக்வாநகர் பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலகம், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் ஆகியவற்றின் ஏற்பாட்டில் மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இதன்போது முதல் நிகழ்வாக சுனாமி அனர்த்தில் மூதூர் பிரதேசத்தில் உயிரிழந்த 286 நபர்களின் பெயர்கள் அடங்கிய நினைவுப் பெயர்பலகை திருகோணமலை மாவட்ட அரசாங்க சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களினால் திரை நீக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து, சுனாமி அனர்த்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு ஆத்ம சாந்தி வேண்டி 9.27 மணிக்கு 2 நிமிட மௌனப் பிரார்த்தனை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாராச்சி அவர்களும் ஏனைய அதிதிகளாக திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ்.சுதாகரன், திருகோணமலை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் குகதாஸ் சுகனதாஸ், மூதூர் வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ், மூதூர் பிரதேச செயலகத்தின் உதவிப் பிரதேச செயலாளர் றொசானா றசீம், சர்வமதத் தலைவர்கள், அரசத் திணைக்களங்களின் உயரதிகாரிகள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருகோணமலை கடற்பரப்பில் ஆளில்லா விமானம்

east tamil

Update – 3 – கடலில் நீராட சென்ற 3 பேர் – மூவரின் சடலமும் மீட்பு

east tamil

Update 2 – கடலில் நீராட சென்ற 3 பேர்! – சிறுவனின் சடலம் மீட்பு

east tamil

கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர்களுக்கு நியமனம்

east tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

east tamil

Leave a Comment