இன்றைய தினம் (26.12.2024) திருகோணமலை பிரதான கடற்கரையில் சுனாமி ஆழிப் பேரலையின் 20ம் ஆண்டு நினைவையொட்டி ஆழ்கடல் மற்றும் கடற்கரை சுத்தப்படுத்தல் இடம்பெற்றது.
சுனாமி ஆழிப் பேரலையின் 20ம் ஆண்டு நினைவை முன்னிட்டு இன்று காலை 8.30 மணியளவில் திருகோணமலை பிரதான கடற்கரையில், பாக்குநீரினையை நீந்தி கடந்து சாதனைபுரிந்த இளம் வீரர் தன்வந்த் தலைமையில், பாலர் பாடசாலை மாணவர்கள் இணைந்து ஆழ்கடல் மற்றும் கடற்கரை சுத்தப்படுத்தலில் ஈடுபட்டனர்.
இதன் போது கடலில் கலந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகள் நீச்சல் வீரர்கள் மூலம் அகற்றப்பட்டதை தொடர்ந்து, 2004 ஆம் ஆண்டில் நிகழ்ந்த சுனாமி பேரலையால் உயிர்ச்சேதமடைந்த உறவுகளுக்கு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டு மெழுகுதிரிகள் ஏற்றி வைக்கப்பட்டது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1