மகொன பிரதேசத்தில் உள்ள சிறுவர் இல்லத்தில் தங்கியிருந்த 9 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டில் அதே சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 16 வயது இளைஞனை பயாகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.
துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகியதாக கூறப்படும் சிறுமி, விடுமுறைக்கு சென்ற போது, தனது பாட்டியிடம் இதுபற்றி கூறியதையடுத்து, இது குறித்து மொரட்டுவ பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
மொரட்டுவ பொலிஸார் நீதிமன்றில் உண்மைகளை தெரிவித்ததையடுத்து விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பயாகல பொலிஸாருக்கு மொரட்டுவ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, கைது செய்யப்பட்ட 16 வயது சிறுவனை நேற்று (25) களுத்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1