திருகோணமலை 6ம் கட்டை கோணேசபுரி பகுதியில் அரச கட்டிடம் ஒன்று கவனிப்பாரற்ற முறையில் காணப்படுகிறது.
வைத்தியசாலையாக பயன்படுத்தப்பட்டு வந்த குறித்த கட்டிடம் தற்போது இளைஞர்களால் சட்ட விரோத செயல்களில் ஈடுபட பயன்படுத்தப்பட்டு வருகின்றதாக தெரிய வருகிறது.
பல தேவைகளுக்கு கட்டிடங்கள் இல்லாமல் அவதியுறுகின்ற நிலையில் குறித்த கட்டிடம் பாழடைந்து, அழிவடைந்து செல்வதை பார்க்கும்போது கவலையாக இருப்பதாக குறித்த பகுதியில் உள்ள மக்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், அக்கட்டிடம் சரி செய்யப்பட்டு சமூக நலத்திற்கான ஒரு மையமாக மாற்றப்பட வேண்டும் என பொறுப்பான அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1