நேற்றைய தினம் (25.12.2024) திருகோணமலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகள் 12 பேருக்கான ஆடைகள் மற்றும் அன்றாட தேவைக்குரிய பொருட்கள் AHRC நிறுவனத்தினால் சிறைச்சாலையின் உதவி அத்தியட்சகரிடம் கையளிக்கப்பட்டன.
கடந்த வெள்ளிக்கிழமை (20) திருகோணமலைக்கு கொண்டுவரப்பட்ட மியன்மார் அகதிகள் 115 பேரிரும் அன்றையதினம் மாலை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது சட்டவிரோதமான முறையில் இலங்கை கடற்பரப்புக்குள் உள் நுழைந்த குற்றச்சாட்டில் 12 மாலுமிகள் கைது செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1