கிளிநொச்சி நகரில் இன்று மாலை 5.20 மணியளவில் சுயாதின ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன், இனந்தெரியாத 2 நபர்களால் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளார். அவரை ஏ9 வீதியில் ரெலிக்கொம் அலுவலகம் அருகில் இருந்து கடத்த முற்பட்ட போது, தப்பிக்க முயன்றபோதே கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
தாக்குதலுக்கு பின் கடுமையான காயங்களுடன் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட தமிழ்ச்செல்வன் சிகிச்சை பெற்று வருகிறார்.
தமிழ்செல்வம் அவர்கள் பெரும்பாலும் சட்டவிரோத போதைப்பொருள், சட்டவிரோத மணல் அகழ்வு மற்றும் சட்டவிரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஊடகங்களில் எழுதி வரும் நபராக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
What’s your Reaction?
+1
1
+1
+1
+1
+1
1
+1
+1