பிலியந்தலை ஜாலியாகொட பகுதியில் உள்ள கடை ஒன்றின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் ஏறி, ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவை சந்திக்க விரும்புவதாக கூறி கலவரமாக நடந்து கொண்ட நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பிலியந்தலை தும்போவில பிரதேசத்தைச் சேர்ந்த (53) வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த நபர் (26) காலை வாளுடன் ஜாலியகொட சந்திக்கு வந்து அங்கிருந்தவர்களிடம் கடுமையான வார்த்தைகளை கூறி தர்க்கப்பட்டார்.
இதன் பின்னர், ஜனாதிபதி அனுருகுமார திஸாநாயக்கவை சந்திக்க விரும்புவதாகவும், இல்லாவிட்டால் கழுத்தை அறுத்து தற்கொலை செய்து கொள்வேன் எனவும் கூறி, அருகில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றில் ஏறி ரகளையில் ஈடுபட்டுள்ளார்.
அயலவர்களால் நிலைமையை கட்டுப்படுத்த முடியவில்லை, இது குறித்து பிலியந்தலை பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.
வன்முறையாக நடந்து கொண்ட நபர் மனநிலை பாதிக்கப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.