24.9 C
Jaffna
January 15, 2025
Pagetamil
கிழக்கு

இன்னும் நீதி கிடைக்காமல் ஜோசப் பரராஜசிங்கம்

மட்டக்களப்பு புனித மரியாள் தேவாலயத்தில் கிறிஸ்மஸ் ஆராதனையின்போது சுட்டுக்கொல்லப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 19ஆவது நினைவு தினம் நேற்று (25.12.2024) மட்டக்களப்பில் அனுஸ்டிக்கப்பட்டது.

மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் மாலை தமிழரசுக்கட்சியின் வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கே. சோபனன் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. இதன்போது முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலைக்கு நீதிவேண்டி கவன ஈர்ப்பு ஊர்வலம் நடாத்தப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்திற்கு அருகிலிருந்து நிகழ்வு நடைபெறும் இடம்வரையிலும் இந்த நீதிகோரிய கவன ஈர்ப்பு பேரணி நடைபெற்றது. வேண்டும்! வேண்டும்! நீதி வேண்டும்!, கைது செய்! கைது செய்! குற்றவாளியை கைது செய்! என்ற கோஷங்களுடன் குறித்த பேரணி ஊர்வலம் இடம்பெற்றது.

அதனை தொடர்ந்து மண்டபத்தில் ஜோசப் பரராஜசிங்கத்தின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு ஈகச்சுடர் ஏற்றப்பட்டு அகவணக்கம் செலுத்தப்பட்டது. மலர் மாலையினை நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன், வாலிப முன்னணியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் சோபனன் ஆகியோர் அணிவித்ததுடன் சிவஸ்ரீ முரசொளிமாறன் குருக்கள், அருட்தந்தை க.ஜெகதாஸ் அடிகளார் உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் ஈகச்சுடர் ஏற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

இதன்போது கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டதுறை ஓய்வுநிலை பேராசிரியர் வி.ரி.தமிழ்மாறன் கூட்டாட்சிக் கோட்பாடும் சுயாட்சி வடிவங்களும் என்னும் தலைப்பில் நினைவுப்பேருரையாற்றப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்லோயா ஆறு உடைபெடுக்கும் ஆபத்து

east tamil

ஏறாவூரில் கிணற்றில் வீழ்ந்த இரண்டு வயது குழந்தை உயிரிழப்பு

east tamil

ஆலய அபிவிருத்தி மற்றும் தொழும்பாளர் நலன் சந்திப்பு

east tamil

துருது பௌர்ணமி தினத்தில் கிழக்கு மாகாண ஆளுநரின் விஜயம்

east tamil

காத்தான்குடி பகுதியில் போதைப்பொருளுடன் ஏழு பேர் கைது

east tamil

Leave a Comment