மட்டக்களப்பு மாவட்டத்தில், வெல்லாவெளி போரதீவுபற்று பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள திக்கோடையில், வயற்காலில் உயிரிழந்த நிலையில் ஒரு ஆண் யானை இனங்காணப்பட்டுள்ளது.
சுமார் 20 முதல் 25 வயதிற்குள் உள்ளதாக கருதப்படும் இந்த ஆண் யானை, வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
வெல்லாவெளி பிரதேசத்தில் காட்டுயானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதனால், மக்கள் மற்றும் விலங்குகள் பலவிதமான பிரச்சினைகளுக்கு உள்ளாகின்றனர். குறிப்பாக, முறையான பாதுகாப்பு வேலிகள் இல்லாமல் இருப்பதால் யானைகள் பல்வேறு ஆபத்துகளுக்கு முகங்கொடுக்கின்றன.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தகவல்களை சேகரிக்கும் பணியில் வெல்லாவெளி வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1