Pagetamil
கிழக்கு

மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

நத்தார் பண்டிகையையொட்டி இன்று (25.12.2024) மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 சிறைக்கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

சிறிய குற்றங்களுக்காகவும், வேறு காரணங்களுக்காகவும் தண்டனை பெற்றவர்களுக்கு நத்தார் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியினால் வழங்கப்படுகின்ற பொது மன்னிப்பின் அடிப்படையில் குறித்த பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதனடிப்படையில், மட்டக்களப்பு சிறைச்சாலையிலிருந்து 12 ஆண் கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வு மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்றுள்ளதுடன், இதன்போது சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலை அதிகாரிகள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

திருக்கோணமலையில் சுனாமி நினைவேந்தல்

east tamil

39 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன்

east tamil

ஆழிப் பேரலை நினைவில் ஆள் கடல் சுத்தமாக்கல்

east tamil

இன்னும் நீதி கிடைக்காமல் ஜோசப் பரராஜசிங்கம்

east tamil

கோணேசபுரியில் வீணாகும் அரச வளங்கள்

east tamil

Leave a Comment