27.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
கிழக்கு

இலுப்பங்குளம் வீதி புனரமைப்பு பணிகளில் தாமதம் – மக்கள் அவதி

திருகோணமலை பட்டினமும் சூழலும் செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பங்குளம் பிரதான வீதி, புனரமைப்பு பணிகளுக்காக நீண்ட நாட்களாக ஆயத்த பணிகள் இடம்பெற்ற நிலையில் அப்படியே உள்ளது.

குறித்த வீதியில், வீதி புனரமைப்பின் பொருட்டு கிரவல் மண் கொட்டப்பட்டிருந்தாலும், புனரமைப்பு பணிகள் தொடராமல் நிறுத்தப்பட்டுள்ளன.

இதனால், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்கள் தினசரி போக்குவரத்தினை மேற்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர். குறிப்பாக, பள்ளி மாணவர்கள், வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆகியோர் இந்த பாதையில் பயணம் செய்வதில் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

மேலும், புனரமைப்பு பணிகளுக்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டபோதிலும், பணிகள் முறையாக தொடராமல் காலம் தாழ்த்தி செல்லப்படுவதால், பொதுமக்கள் பெரும் இன்னலுக்குள்ளாகியுள்ளனர்.

இவ் வீதியை முறையாக, புனரமைப்பு செய்து தரும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

2024ம் ஆண்டு ஆட்சேர்ப்பில் கிழக்கு மாகாண 52 ஆசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள்

east tamil

மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெற்ற சுனாமி நினைவேந்தல் நிகழ்வு

east tamil

திருக்கோணமலையில் சுனாமி நினைவேந்தல்

east tamil

39 வருட கல்விச் சேவையிலிருந்து ஓய்வுபெறும் திருமதி. லிங்கேஸ்வரி ரவிராஜன்

east tamil

ஆழிப் பேரலை நினைவில் ஆழ் கடல் சுத்தமாக்கல்

east tamil

Leave a Comment