இலங்கை கராத்தே சங்கத்தின் கிழக்கு மாகாண கிளையின் ஏற்பாட்டில் கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களை உள்ளடக்கியதாக 05 தொடக்கம் 12 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கராத்தே போட்டியானது நேற்றைய தினம் (24) மட்டக்களப்பு வெபர் விளையாட்டு மைதான உள்ளக அரங்கில் நடைபெற்றது.
கிழக்கு மாகாண கராத்தே சங்கத்தின் தலைவர் கேந்திரமூர்த்தி மற்றும் செயலாளர் K.T பிரகாஷ் உள்ளிட்டவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார்.
மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளிட்ட மூன்று மாவட்டங்களில் இருந்தும் சுமார் 200 போட்டியாளர்கள் பங்கு பற்றிய இப்போட்டியில் மட்டக்களப்பு மாவட்டம் 54 தங்கப் பதக்கங்கள் வெள்ளி, வெண்கல பதக்கங்கள் உள்ளடங்களாக சுமார் 110 பதக்கங்களை பெற்று முன்னிலை வகித்தது.