மட்டக்களப்பு மாவட்டம் நத்தார் பண்டிகை கொண்டாடும் வகையில் மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு நகரில் 50 அடி உயரம் கொண்ட நத்தர் மரம் நேற்று இரவு 12 மணிக்கு திறந்து வைக்கப்பட்டது.
கழிவுப் பொருட்களினால் உருவாக்கப்பட்டுள்ள ஒளியூட்டப்பட்ட இந்த நத்தார் மரம் கான்போரை ஈர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இதன் திறப்பு விழா இரவு மட்டக்களப்பு மாநகர ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர சபை உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டிருந்தனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1