25.8 C
Jaffna
December 26, 2024
Pagetamil
இலங்கை

ரணில் அரசு இடைநிறுத்திய மின்சாரசபையின் 62 ஊழியர்களுக்கும் மீண்டும் பணி!

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்குவதற்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட 62 ஊழியர்கள் மீண்டும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

எரிசக்தி அமைச்சர் பொறியியலாளர் குமார ஜயக்கொடியின் உத்தரவுக்கு அமைய இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அனைத்துக் குற்றச்சாட்டுக்களிலிருந்தும் ஊழியர்களை விடுவிக்கவும், அவர்களது முந்தைய பணியிடங்களில் மீண்டும் பணியில் அமர்த்தவும், அபராதங்களில் இருந்து விடுவிக்கவும் மின்சாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும், எட்டு மாத சம்பள நிலுவையை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஊழியர்களுக்கு அமைச்சர் ஜெயக்கொடி நேற்று (24) மீண்டும் பணியில் சேர்ப்பதற்கான கடிதங்களை வழங்கினார்.

இலங்கை மின்சார சபையை தனியார் மயமாக்கும் திட்டம் இருப்பதாகக் கூறி, கடந்த ஜனவரி மாதம் இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தன.

அப்போது மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்திருந்தார். மின்சார விநியோகம் அத்தியாவசிய சேவையாக பிரகடனப்படுத்தப்பட்ட போதிலும், பாவனையாளர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்திய கடமைகளை செய்யாதவர்களை பணி இடைநிறுத்தம் செய்வதும் இந்த நடவடிக்கைகளில் அடங்கும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஊடகவியலாளரை கடத்த முயற்சி!

east tamil

ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியிலிருந்து கழற்றி விடப்படும் கட்சிகள் எவை?: ஞாயிறு தீர்மானம்!

Pagetamil

கழுத்துக்குள் பாய்ந்த தடி அகற்றப்பட்டது: வவுனியா வைத்தியசாலையில் வெற்றிகரமான அறுவை சிகிச்சை!

Pagetamil

இலங்கையில் 2024 சுற்றுலா வருகைகள் 2 மில்லியனைத் தாண்டியது

east tamil

ஊடகவியலாளர்களுக்கு இனி அனுமதி இல்லை

east tamil

Leave a Comment