27.5 C
Jaffna
December 25, 2024
Pagetamil
கிழக்கு

அனுமதியின்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்த இருவர் கைது

வைத்தியசாலையில் அத்துமீறி உட்பிரவேசித்த இருவர் கல்முனை தலைமையக பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வைத்திய அத்தியட்சகரின் உரிய அனுமதியின்றி அம்பாறை மாவட்டத்தில் கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை வளாகத்தில் இருவர் உள்நுழைந்த சம்பவம் அந்த வட்டாரங்களில் பெரும் பரபரப்பை நேற்றைய தினம் (23) ஏற்படுத்தியிருந்தது.

குறித்த வைத்தியசாலையில் இருவர் அனுமதியின்றி உட்பிரவேசித்ததாக அங்கு பாதுகாப்பு பணிக்கு பொறுப்பான அதிகாரிகளினால் முறைப்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து, குறித்த இருவரையும் கல்முனை தலைமையக பொலிஸார் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

கைது செய்யப்படடவர்கள், கல்முனை மாநகரில் உள்ள பிரபல ஆடையகம் ஒன்றின் பணியாளர்கள் என்பதுடன், குறித்த வைத்தியசாலை பணிப்பாளரின் முன் அனுமதியின்றி சுத்தியலுடன் வைத்தியசாலைக்குள் பிரவேசித்ததோடு, அங்கு சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடி, முரண்பாடான கருத்துக்களை வைத்தியசாலை பாதுகாப்பு உத்தியோகத்தரிடம் தெரிவித்துள்ளதாக விசாரணையில் இருந்து தெரிய வருகிறது.

எனினும், கைதானவர்கள் வழமைபோல தாங்கள் புதிய ஆண்டுக்கான கலண்டர்களை அரசு, தனியார் நிறுவனங்களுக்கு கொலுவி அடிப்பதற்குச் சென்றதாகவும், அதன்போது, இவ்வாறான நிலைமை ஏற்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில், குறித்த வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி வைத்தியர். குணசிங்கம் சுகுணன் உள்ளக விசாரணை ஒன்றினை மேற்கொண்டுள்ளதுடன், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரீ.எச்.டி.எம்.எல் புத்திகவின் வழிகாட்டலில் கல்முனை தலைமையக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். ரம்ஷீன் பக்கீர் தலைமையில் மேலதிக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இலங்கை கராத்தே சங்கத்தின் மாகாணமட்ட கராத்தே சுற்றுப் போட்டி

east tamil

மட்டக்களப்பு சிறையிலிருந்த 12 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

east tamil

திருடனை கண்டால் தகவல் வழங்குங்கள்

Pagetamil

ஸ்ரீமத் சுவாமி ஜெகதீஸ்வரானந்தாவின் 28வது சமாதி தின விழா

east tamil

2025ம் ஆண்டு விருதுக்கான விண்ணப்பங்கள்

east tamil

Leave a Comment