நான்கு வயது சிறுவனை தாக்கி கடுமையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் அவரது மாமா கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து அவரை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை பதில் நீதவான் அப்துல் சலாம் சாஹிர் உத்தரவிட்டார். கிண்ணியாவை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 33 வயதுடைய நபரே இவ்வாறு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாய் கிண்ணியா பொலிஸாரிடம் வந்து, தனது முதல் திருமணத்தில் பிற்த குழந்தை இரண்டாவது திருமணமான ஆணால் தாக்கப்பட்டதாக புகார் அளித்தார்.
தாக்குதலுக்கு உள்ளான குழந்தை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, குழந்தை பாரிய பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதை வைத்தியர்கள் அவதானித்ததாக பொலிஸார் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இந்த சம்பவத்தை கவனத்தில் கொண்ட பதில் நீதவான், குழந்தை தொடர்பான தடயவியல் அறிக்கையை அடுத்த நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.