பாதாள உலகத்தை ஒடுக்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், அதன் விளைவுகளை நாடு எதிர்காலத்தில் பார்க்கும் எனவும் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (24) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
குடு சாலிந்த மற்றும் பொடி லஸ்ஸி என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக வெளியான செய்திகள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் ஊடகவியலாளர் மாநாட்டில் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் கூறியதாவது:
“அரசாங்கம் என்ற வகையில், பாதாள உலகத்தையும் போதைப்பொருள் கடத்தலையும் எதிர்த்துப் போரிடுவதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். வாரக்கணக்கில் எடுக்கப்படும் நடவடிக்கைகளை கவனிக்க வேண்டும். 2 சம்பவங்களின் அடிப்படையில் அல்ல.
நாம் செய்யும் செயல்கள் பற்றிய விவாதம் அல்ல முக்கியம். முடிவுகள் முக்கியம். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என்பதைத்தான் இப்போது சொல்ல வேண்டும். விரைவில் முடிவுகளைக் கவனியுங்கள்”