நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் சுற்றுப்பயணத்திற்கான, 17 பேர் கொண்ட இலங்கை கிரிக்கெட் அணியை, தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
2025 ஜனவரி 5, 8 மற்றும் 11 ஆகிய திகதிகளில் நியூசிலாந்தின் வெலிங்டன், ஹாமில்டன் மற்றும் ஆக்லாந்தில் போட்டிகள் நடைபெறும்.
முதல் போட்டி அதிகாலை 03:30 மணிக்கு (IST) தொடங்கும், மீதமுள்ள போட்டிகள் காலை 06:30 மணிக்கு தொடங்கும்.
அணி விபரம் வருமாறு-
சரித் அசலங்க (அணித்தலைவர்), பதும் நிசங்க, அவிஸ்க பெர்னாண்டோ, நிசான் மதுசங்க, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஜனித் லியனகே, நுவனிடு பெர்னாண்டோ, டுனித் வெல்லகே, வனிந்து ஹசரங்க, மகேஸ் தீக்சன, ஜெப்ரி வண்டர்சே, சமிந்து விக்கிரமசிங்க, அசித பெர்னண்டோ, மொஹமட் சிராஸ், லஹிரு குமார, இசான் மலிங்க.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1