மறைந்த நடிகர் ஜாக்சன் அந்தோனியின் மருமகன் எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹெயினடிகலவை கைது செய்தமை தொடர்பில் பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவின் உத்தரவின் பேரில் விசேட விசாரணைகளை பொலிசார் ஆரம்பித்துள்ளனர்.
வீட்டுக்கு அருகில் உள்ள கடைக்கு சென்ற போது அவரிடம் தேசிய அடையாள அட்டை இல்லை என்று கூறி அத்துகிரிய பொலிசார் இவரை கைது செய்துள்ளனர். மேல்மாகாண தென் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மேற்பார்வையில் இந்த விசாரணை நடத்தப்பட்டு வருவதாக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.
எழுத்தாளர் கசுன் மகேந்திர ஹினட்டிகல தமக்கு நேர்ந்த இந்த அநீதி தொடர்பில் பொலிஸ் மா அதிபர் நிவாரண அலுவலகத்தில் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
கசுன் மகேந்திர கடந்த 20ஆம் திகதி மாலை அவரது ஹபரகட இல்லத்திற்கு அருகில் பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டார்.
இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி புத்திக மனதுங்க, அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தின் உப பொலிஸ் பரிசோதகர் உட்பட மூவர் மிரிஹான தலைமையக பொலிஸாருக்கு தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டதாக தெரிவித்தார்.
லஞ்ச ஒழிப்புப் பிரிவின் நிலைய பொறுப்பதிகாரியாக பணியாற்றிய உப பொலிஸ் பதிசோதகர் மற்றும் இரண்டு பொலிஸ் கான்ஸ்டபிள்கள் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பொலிசார் சிவில் உடையில் தன்னை முச்சக்கரவண்டியில் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், அவரின் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்காக அவரது மனைவி வீட்டிலிருந்து அடையாள அட்டையை எடுத்து வந்து பொலிஸில் ஒப்படைத்ததாகவும் கசுன் மகேந்திர தெரிவித்தார்.