மட்டக்களப்பு கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலக கிராம உத்தியோகத்தர் தாக்கப்பட்டமையை கண்டித்தும் இதற்கு காரணமானவர்களை கைது செய்து சட்டத்தின்முன் நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கக் கோரி இன்று (23) திங்கட்கிழமை கவன ஈர்ப்புப் போராட்டம் அமைதியான முறையில், முன்னெடுக்கப் பட்டிருந்தது.
கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராமசேவகர் ஒருவர் கடந்த 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை கடமை நிமித்தம் தனது பிரதேசத்திற்கு சென்று வரும் போது சில நபர்களினால் தாக்கப்படட்டு வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
தாக்கப்பட்ட நபர்களை இதுவரை போலீசார் கைது செய்யவில்லை என கூறி கண்டன ஆர்ப்பாட்டம் வாழைச்சேனை பிரதேச செயலகத்திற்கு முன் பிரதேச செயலக உத்தியோகஸ்தர்களினால் இடம்பெற்றது.
இதன்போது- ” கைது செய் கைது செய் தாக்கிய வரை கைது செய்”, “அரச உத்தியோகஸ்தரின் பாதுகாப்பை உறுதி செய் “, “கடமையை செய்தால் உயிருக்கு அச்சுறுத்தலா “, “அரச பணியாளர்கள் மீதான தாக்குதலுக்கு எப்போது தீர்வு“
போன்ற வசனங்கள் ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது வருகை தந்த வாழைச்சேனை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி
குறித்த சந்தேகநபரை போலீசார் தேடிக் கொண்டிருப்பதாகவும் இதுவரை அவர்களை கைது செய்யப்படவில்லை என்றும் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார் .
பொஸிசாரின் உறுதிமொழியை அடுத்து போலீஸ் நிலைய பொறுப்பாதிகரியிடமும் பிரதேச செயலாளரிடமும் மகஜர் கையளித்து விட்டு கலைந்து சென்று தங்கள் கடமைகளை செய்தனர் .
-கிரான் நிருபர்-