25.5 C
Jaffna
December 24, 2024
Pagetamil
கிழக்கு

மியன்மார் அகதிகளை மிரிஹானவில் தடுத்து வைக்க தடை

கடந்த வாரம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மியன்மார் நாட்டு அகதிகள் 103 பேர் முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைக்கப்படுவதற்காக இன்று மாலை 5 மணியளவில் அங்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

மிரிஹானவிலுள்ள தடுப்பு முகாமில் தடுத்து வைத்திருப்பதற்கு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததன் பிரகாரம் இவர்களை மிரிஹானவுக்கு அழைத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சில தினங்களுக்கு முன்னர் அவர்கள் திருகோணமலையிலிருந்து அங்கு செல்வதற்கு ஆயத்தமாக வாகனங்களில் ஏற்றப்பட்டிருந்தனர்.

எனினும், குறித்த தடுப்பு முகாமில், அவர்களை வைத்து பேணுவதற்கான வசதிகள், உரிய நிதிப்புலன் இல்லை என்ற காரணத்தால், அவர்கள் மீளவும் திருகோணமலைக்குக் அழைத்துவரப்பட்டு, திருகோணமலை ஜமாலியா பாடசாலையில் தொடர்ந்து தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மீண்டும் இன்று (23) காலையில் அவர்கள் இரண்டு பஸ்களில் ஏற்றப்பட்டு மிரிஹானவுக்கு என அழைத்துச் செல்லப்பட்டனர். ஆயினும், மிரிஹானவுக்கு அவர்களை அழைத்து வர வேண்டாம் என்ற உத்தரவு மிஹிந்தலை – ஹபரண பகுதியின் இடைவழியில் வைத்து பஸ் பொறுப்பாளர்களுக்குக் கிடைக்கப்படவே அவர்கள் பயணித்த பஸ்கள் இடைநிறுத்தப்பட்டன.

இதனையடுத்து திருகோணமலை துறைமுகப் பொலிஸார் திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் பதில் நீதிவான் முன்னிலையில் இன்று முற்பகல் நகர்த்தல் பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்து, அந்த அகதிகளை முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத்தளக் கட்டளை அதிகாரியிடம் கையளிப்பதற்கான உத்தரவைப் பெற்றனர்.

அந்த உத்தரவுப் பத்திரம் இன்று பிற்பகல் மோட்டார் சைக்கிள் மூலம் எடுத்து விரையப்பட்டு, ஹபரண பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த அகதிகளின் பஸ்களின் பொறுப்பாளர்களுக்கு வழங்கப்பட்டதனையடுத்து, அந்த அகதிகளை முல்லைத்தீவு – கேப்பாப்பிலவு விமானப் படைத் தள முகாமில் தடுத்து வைத்திருப்பதற்காக அந்தப் படைத்த தள முகாம் கட்டளை அதிகாரியிடம் கையளிப்பதற்கு அவர்கள் இன்று மாலை அழைத்து செல்லப்பட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அதிக ஞாபகத்திறன் கொண்ட 4 வயது சிறுவன்

east tamil

விருதுகள் வழங்கப்பட்டது ஏன்?

east tamil

மதுபானசாலையில் வாள்வெட்டு

east tamil

வாழைச்சேனையில் கிராமசேவகர் தாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம்

Pagetamil

இலங்கை மீண்டும் சிக்கியுள்ளது – கோவிந்தன் கருணாகரம்

east tamil

Leave a Comment