25.4 C
Jaffna
December 24, 2024
Pagetamil
கிழக்கு

அதிக ஞாபகத்திறன் கொண்ட 4 வயது சிறுவன்

அதிக ஞாபகத் திறன் கொண்ட 4 வயது சிறுவன் ஆரிப்ற்கு சோழன் உலக சாதனை படைத்த விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

பல தலைப்புகளின் கீழ் வேகமாக எழுதுதல், வாசித்தல் மற்றும் ஒப்புவித்தல் போன்றவற்றின் மூலம் அதிக ஞாபகத் திறன் கொண்ட சிறுவனாக திருகோணமலை மாவட்டம் கிண்ணியாவில் வசித்து வரும் நஜிமுல் ஹக் மற்றும் பாத்திமா நஸ்ரின் போன்றோரின் நான்கு வயது மகனான ஆரிப் விளங்குகிறார்.

தொடர் பயிற்சியின் காரணமாக கிடைத்த அதிக ஞாபகத் திறன் மூலம், மனித உடலின் முக்கிய 41 எலும்புகளின் பெயர்களை 13:46 நொடிகளில் ஒப்புவித்தல், 41 பெரிய எலும்புகளுடன் இணைந்திருக்கும் மற்றைய எலும்புகளின் பெயர்களை ஒப்புவித்தல், பவர் ஆஃப் டென் (power of ten) எண்களை ஒரு நிமிடம் மற்றும் 6 நொடிகளில் ஒப்புவித்தல், ஒன்று முதல் 100 வரையான ஓடினல் (Ordinal) எண்களை 42 நொடிகளில் ஒப்புவித்தல், அனைத்து தசம (Decimal) எண்களையும் ஒரு நிமிடம் மற்றும் 17 நொடிகளில் ஒப்புவித்த அதேவேளை அவற்றை வேகமாக எழுதியும் காட்டுதல், நடுவர்கள் கூறிய எலும்புகளை துல்லியமான அடையாளம் காட்டிய அதேவேளை எலும்புகள் இருக்கும் இடங்களையும் சரியாகத் தொட்டுக் காட்டுதல், 40 வரையான பெரிய இலக்கங்களை (Big numbers) 4 நிமிடங்கள் மற்றும் 30 நொடிகளில் வாசித்தல், அனைத்து பின்ன (fraction) எண்களையும் எழுதுதல், வாசித்தல், தசமங்களை (Decimals) பின்னமாக (fractions) மாற்றுதல் என இவ் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருந்தார்.

சோழன் உலக சாதனைப் புத்தக நிறுவனத்துடன் இணைந்து பீப்பிள் ஹெல்பிங் பீப்பள் பவுண்டேஷன் நடத்திய இந்த நிகழ்வு கிண்ணியா மத்திய கல்லூரியில் நடைபெற்றதோடு, இந் நிகழ்விற்கு கிண்ணியா பிரதேசச் செயலாளர் திரு.எம்.எச்.மொஹமட் கனி அவர்கள் முன்னிலை வகித்தார்.

சோழன் உலக சாதனை படைத்த சிறுவன் ஆரிப்பிற்கு சட்டகம் செய்யப்பட்ட சான்றிதழ், நினைவு கேடயம், தங்கப்பதக்கம், அடையாள அட்டை மற்றும் பைல் போன்றவை வழங்கிப் பாராட்டப்பட்டது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

4 வயது குழந்தையை துஷ்பிரயோகம் செய்த 2வது கணவன்!

Pagetamil

மியன்மார் அகதிகளை மிரிஹானவில் தடுத்து வைக்க தடை

east tamil

விருதுகள் வழங்கப்பட்டது ஏன்?

east tamil

மதுபானசாலையில் வாள்வெட்டு

east tamil

வாழைச்சேனையில் கிராமசேவகர் தாக்கப்பட்டதற்கு எதிராக போராட்டம்

Pagetamil

Leave a Comment