25.6 C
Jaffna
January 4, 2025
Pagetamil
இந்தியா

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி, மகன் உறவான 19 வயது இளைஞரை திருமணம் செய்து கொண்டு பாதுகாப்பு வேண்டி காவல் நிலையத்தில் ஆஜரான செவிலியர் பெண்ணால் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் வேப்பம்பட்டு பாலாஜி நகர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மா. இவரது கணவர் தணிகைவேல். முனியம்மாள் அப்பகுதியில் வீட்டு வேலை செய்து வரும் நிலையில் கணவரை பிரிந்து 24 வயது கொண்ட தேவி என்ற மகளுடன் வசித்து வருகிறார். தேவி டிப்ளமோ செவிலியர் படிப்பை முடித்துவிட்டு வீடுகளில் நோய்வாய்ப்பட்டுள்ள நோயாளிகளுக்கு வீட்டிலேயே தங்கி மருத்துவம் பார்க்கும் செவிலியர் பணியை செய்து வந்தார். கடந்த நான்கு மாதங்களாக பணி இல்லாமல் வீட்டிலேயே இருந்து வரும் தேவி கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து மாயமானார். மகள் மாயமானதாக கண்டுபிடித்து தருமாறு பெண்ணின் தாய் முனியம்மாள் கடந்த 24- ஆம் தேதி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், அதே பகுதியில் சாய்ராம் என்ற 19 வயது இளைஞனும் காணாமல் போனது குறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் அவர்கள் பெற்றோர்கள் புகார் அளித்துள்ளனர். காணாமல் போன தேவி, சாய்ராம் ஆகிய இருவரும் திருமணம் செய்து கொண்டது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தேவி, சாய்ராம் இருவரும் சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில் பாதுகாப்பு வேண்டி செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் நேற்றைய தினம் காதல் ஜோடிகள் ஆஜரானார்கள். விசாரணை மேற்கொண்டதில் 19 வயது இளைஞரான சாய்ராமுக்கும், அதே பகுதியை சேர்ந்த 24 வயதான தேவிக்கும் சித்தி முறை வருவதாகவும், இருப்பினும் கடந்த மூன்று மாதங்களாக சாய்ராம் தேவி காதலித்து வந்ததாகவும் இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னை பெசன்ட் நகரில் உள்ள முருகன் கோவில் இருவரும் திருமணம் செய்து கொண்டுள்ளனர்.

செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் இரு தரப்பினரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தேவியின் தாய் மாமன் மணி தேவியை காதலித்து வந்ததாகவும், இதற்கிடையில் கடந்த மூன்று மாதங்களாக தேவியின் நடவடிக்கையில் மணி சந்தேகம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது. காவல் நிலையத்தில் இந்த விசாரணை ஒரு புறம் சென்று கொண்டிருக்க திடீரென சோழவரம் அருகே காரனோடை பகுதியில் இருந்து விஜய் என்ற இளைஞரும் தன்னை ஒன்றரை ஆண்டுகளாக தேவி காதலித்து தன்னிடம் சுமார் 5 லட்சம் ரூபாய் வரை ஏமாற்றி பணம் பொருளாக வாங்கியதாகவும், தன்னை ஏன் ஏமாற்றினால் என்று கேள்விக்கு பதில் வேண்டுமென ஆதங்கத்துடன் தேவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களின் கொண்ட செல்போனோடு காவல் நிலையத்திற்கு விஜய் என்ற இளைஞர் வந்ததால் அடுத்த கட்ட பரபரப்பு மேலோங்கியது.

இதை அடுத்து கடுப்பான காவல்துறையினர், தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். அப்பொழுது காவலரே திகைத்துப் போகும் நிலையில், விசாரணையில் அதிர்ச்சி காத்திருந்தது. செவிலியராக பணிபுரிந்து வந்த தேவி, இதுவரை 12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றி அவர்களிடமிருந்து பணம் நகை பெற்று ஏமாற்றி இருப்பது போலீசாருக்கு தெரியவந்துள்ளது. தேவியிடமிருந்து 19 வயதுடைய சாய்ராமை மீட்டு தரக்கோரி அவருடைய உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதற்கு முன் தேவி 12 நபர்களை ஏமாற்றி அதற்கான ஆதாரத்துடன் காவல் நிலையத்தில் சமர்ப்பித்ததாக கூறப்படுகிறது.

பெண் வீட்டாரோ மகளை தன்னுடன் அழைத்துச் செல்ல தயாராக இருந்த நிலையிலும் 19 வயது இளைஞரான சாய்ராம் தேவியை விட்டு பிரிவதற்கு மனம் இல்லாமல் கதறி அழுதுள்ளார். இதற்கு மேல் போனால் நம்மையும் நமது தாயையும் சிறையில் அடைத்து விடுவார்கள் என உஷாரான தேவி தனது தாயுடன் செல்கிறேன் என ஒப்புக்கொண்டார். மனம் உடைந்த 19 வயது காதலன் சினிமா படங்களில் வருவது போல் தன் தாயின் தோளில் சாய்ந்து கொண்டு தேம்பி அழுதார். ஒரு வழியாக 19 வயது இளைஞரான சாய்ராமை அடக்கி இரு சக்கர வாகனத்தில் அவர்களது பெற்றோர் அழைத்துச் சென்றனர். மேலும் இருவரது தரப்பிலும் சமசராச பேச்சுவார்த்தை ஏற்படுத்தி அவர், அவரது பெற்றோர் வீட்டிற்கு காவல் துறையினர் அனுப்பிவைப்பதற்க்குள் படாத பாடுபட்டனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆக்ராவில் அவுரங்கசீப் மாளிகை இடிப்பு

Pagetamil

7 மணி நேர காத்திருப்புக்குப் பின் அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத் துறையினர் சோதனை

Pagetamil

ரூ.931 கோடி சொத்து: இந்தியாவின் பணக்கார முதல்வர் சந்திரபாபு நாயுடு

Pagetamil

தடையை மீறி போராட்டம்: சென்னையில் சீமான் கைது

Pagetamil

சென்னையில் மாணவியை ரயிலில் தள்ளிவிட்டு கொன்ற வழக்கில் முன்னாள் காதலருக்கு தூக்கு தண்டனை

Pagetamil

Leave a Comment