நத்தார் தினத்தை முன்னிட்டு, நேற்றைய தினம் (20.12.2024) திருகோணமலையில் உள்ள BLOSSOMING FUTURE முன்பள்ளியால் சமூகத்தின் பசுமை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிக்கும் முயற்சியாக விழிப்புணர்வு நிகழ்வொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.
பிளாஸ்டிக் இல்லாத எதிர்காலத்தை உருவாக்கும் நோக்கில், சிறுவயதில் இருந்து மரங்களை வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவித்து பசுமைiயான உலகை உருவாக்கும் பொருட்டு திருகோணமலை 3ஆம் கட்டை சந்தியில் காலை 8.30 மணியில் இருந்து ஒரு மணி நேரம் வரை இந்நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வின் போது, சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசியத்தை விளக்கும் ஒரு அறிகுறியாக முன்பள்ளி மாணவர்களின் பங்கேற்புடன் 100 மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வு, சமூகத்தில் சுற்றுச்சூழல் பொறுப்புணர்வை ஏற்படுத்துவதுடன், பசுமையான உலகத்தை வடிவமைக்க, உறுதிமொழியளிக்கும் ஒரு முக்கியமான முயற்சியாக முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.