ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி பிரதேச செயலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இன்று (20) பணிப் புறக்கணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.
குறிப்பிட்ட நிர்வாக உத்தியோகத்தரின் செயல்பாடுகள் தொடர்பான பின்புலமே அங்கு பணிப் புறக்கணிப்பில் ஏனையோர் ஈடுபட காரணம் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன.
ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் பணிபுரியும் நிர்வாக உத்தியோகத்தரை இடமாற்றம் செய்யக்கோரி மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கான தீர்வு கிடைக்காததே, அதிகாரிகள் இந்த முயற்சியில் ஈடுபட காரணம் என தெரிவிக்கப்படுகிறது.
நடைபெற்ற இந்தப் பணிப் புறக்கணிப்பால் அலுவலகத்தின் தினசரி செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதோடு, பிரதேச மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
இந்நிலையில், பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு இந்த பிரச்சினைக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென சமூக செயற்பாட்டாளர்கள் வலியுறுத்துகின்றனர்.