27.7 C
Jaffna
December 20, 2024
Pagetamil
இலங்கை

யாழ்ப்பாணத்தை சிங்கப்பூராக்க வர்த்தகர்களாலேயே முடியும்

அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும் என அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள் ஜெயேந்திரன் தெரிவித்தார்.

சமகால நிலைமைகள் தொடர்பாக யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனையை பயன்படுத்தி பாராளுமன்ற உறுப்பினராகியுள்ளார். அது சிறந்த விடயம். ஆனால் அந்த விடயங்களை நிரூபிக்க தவறியுள்ளார். அவர் தவறாக செயல்படுவதால் தற்போது பல வழக்குகளை எதிர்கொண்டுள்ளார். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் சத்தியமூர்த்தி ஐயாவுடன் தற்போது தானே பெரிய ஆள் என்பது போல முரண்படுகிறார். அரசியலில் விக்னேஸ்வரனுக்கு ஏற்பட்ட நிலைமையே வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவுக்கும் ஏற்படும்.

எதிர்வரும் காலத்தில் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடுவதற்கு நாங்கள் தற்போது தீர்மானித்துள்ளோம்.

நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக நாங்கள் தற்போது தயாராகி வருகிறோம். அத்துடன் வடக்கு மாகாணத்தை சிங்கப்பூராக உயர்த்துவதற்கு எம்மை போன்ற வர்த்தகர்களை மக்கள் தெரிவு செய்ய வேண்டும் – என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

வன்னி மாவட்ட முன்னாள் எம்.பியும் அவரது செயலாளரும் பிணையில் விடுதலை

Pagetamil

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Pagetamil

கிளிநொச்சியில் ஒருவருக்கு மலேரியா

Pagetamil

எகிறும் விலையில் தேங்காயை சிக்கனமாக பயன்படுத்த முயன்ற சிறுமி பரிதாபமாக பலி!

Pagetamil

மைத்திரியின் மன்னிப்பு பெற்றவரை நாடு கடத்தி வர இன்டர்போலின் உதவி

Pagetamil

Leave a Comment