ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும், வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமான ஏ. எல். அப்துல் மஜீத் (முழக்கம் மஜீத்) அவர்கள் காலமானார்.
நீண்டகாலமாக சுகயீனமுற்றிருந்த நிலையில், சாய்ந்தமருதில் அமைந்துள்ள தனது வீட்டில் நேற்று மாலை (19.12.2024 – வியாழக்கிழமை) இவ் உலகை விட்டு நீத்தார். அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் நாளை காலை 09.00 மணிக்கு நடைபெறும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது.
அப்துல் மஜீத் அவர்கள், தனது அரசியல் வாழ்க்கையில் பல முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார். அவர், இணைந்த வடகிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும், கல்முனை மாநகர சபையின் முன்னாள் பிரதி முதல்வருமானார்.
அன்னாரின் மறைவுக்கு அரசியல் வட்டாரங்களிலும், பொதுமக்களிடையிலும் ஆழ்ந்த இரங்கல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, அவரது சமூகப்பணிகள் மற்றும் அரசியல் சேவைகள் நினைவுகூரப்படுகின்றன.