நேற்றைய தினம் முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் கரையொதுங்கிய மியன்மார் நாட்டின் அகதிகள் படகு இன்றைய தினம் காலை 8.00 மணியளவில் (20.12.2024) திருகோணமலை அஷ்ரப் ஜெட்டிக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
குறித்த படகினை முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரை இறக்குவதில் காணப்பட்ட சிக்கல்கள் காரணமாக திருகோணமலை ஜெட்டி பகுதியில் அவர்களை கரை இறக்கிய பின்னர் உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. இன்று அவர்கள் திருகோணமலை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட உள்ளனர்.
அந்த வகையில், திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரின் தலைமையில் இப் படகில் உள்ளவர்களை பாடசாலை ஒன்றில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் முன்னெடுக்கப்படுவதோடு சுகாதாரத் துறையினர் உட்பட அதனுடன் தொடர்புடைய திணைக்களங்கள் இவர்களுக்கான சேவையினை ஆற்றுவதற்கு தயாராக உள்ளன.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1