கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு முன்னாள் பணிப்பாளரின் விளக்கமறியல் நீடிப்பு!

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் நெவில் டி சில்வா எதிர்வரும் 30 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு குற்றப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நெவில் சில்வா கடந்த 9 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 02 ஆம் திகதி குருவிட்ட இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவுக்கு வந்து தனது 14 கோடி ரூபா பெறுமதியான சொத்து பலவந்தமாக அபகரிக்கப்பட்டதாக முறைப்பாடு செய்தார். அந்த சொத்து அவருக்கு மீளளிக்கப்பட்டது.

இந்த விவகாரத்தில், உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் ஒருதலைப்பட்சமாக செயற்பட்டதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் பொது முறைப்பாடு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

Share post:

spot_imgspot_img

More like this
Related

விமானம் ரத்தானதால் ஆன்லைன் மூலம் ‘ரிசப்ஷனில்’ பங்கேற்ற புதுமண ஜோடி

இண்​டிகோ விமானம் திடீரென ரத்து செய்​யப்​பட்​ட​தால் புதுமண ஜோடி திருமண வரவேற்​பில்...

2026 வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்!

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு, திருத்தங்களுடன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்