Pagetamil
இந்தியா

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

நடைபயிற்சிக்கு தனியாக சென்றதால் மனைவியை விவாகரத்து செய்ய முத்தலாக் கொடுத்தவர் மீது மகாராஷ்டிர போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தின் மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த 25 வயது இளம் பெண் ஒருவர் நடைபயிற்சிக்கு தனியாக சென்றார். இதனால் அந்தப் பெண்ணின் 31-வயது கணவர் கோபம் அடைந்தார். இத்தகவலை மாமனாரிடம் போனில் தெரிவித்த கணவர் , முத்தலாக் மூலம் திருமணத்தை ரத்து செய்வதாக கூறியுள்ளார்.

இது குறித்து அவரது மனைவி போலீஸில் புகார் செய்தார். முத்தலாக் மூலம் விவாகரத்து செய்வது கடந்த 2019-ம் ஆண்டு முதல் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பெண்ணின் கணவர் மீது முஸ்லிம் பெண்கள் திருமண உரிமை பாதுகாப்பு சட்டம், மிரட்டல் குற்றம் ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையும் படியுங்கள்

கச்சத்தீவை மீட்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

மனைவியை கொன்று சூட்கேசில் மறைத்த வைத்த கணவர் கைது

Pagetamil

பாலியல் வன்கொடுமை வழக்கில் அலகாபாத் ஐகோர்ட் வழங்கியது தவறான தீர்ப்பு: மத்திய அமைச்சர் அதிருப்தி

Pagetamil

‘ரூ’ என்பது பெரிதானது ஏன்? – முதல்வர் ஸ்டாலின் விளக்கம்

Pagetamil

யூடியூப் பார்த்து தங்கம் கடத்த கற்றுக்கொண்டேன்: நடிகை ரன்யா ராவ் வாக்குமூலம்

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!