வவுனியா, வேலங்குளம் பகுதியில் யானை தாக்கி முன்னாள் கிராம சேவகர் ஒருவர் மரணமடைந்துள்ளதாக பூவரசன்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
வவுனியா, வேலங்குளம் பகுதியில் வசிக்கும் முன்னாள் கிராம சேவகர் ஒருவர் செவ்வாய்க்கிழமை (10) மாலை தனது மாட்டினை வீடு நோக்கி கொண்டு சென்றிருந்த போது வேலங்குளம் இராணுவ முகாமுக்கு அண்மையில் வீதிக்கு வந்த யானையின் தாக்குதலுக்குள்ளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
முன்னாள் கிராம அலுவலர் மோகனகாந்தி என்பவரே இவ்வாறு மரணமடைந்தவராவார்.
குறித்த யானை சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேலாக குறித்த பகுதியில் நின்று அட்டகாசம் புரிந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பூவரசன்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1