திருகோணமலை ஸ்ரீ கோணேஸ்வரா இந்து கல்லூரியின் 1998ஆம் ஆண்டு உயர்தரக் கல்வி கற்ற பழைய மாணவர்களின் ஒருங்கிணைந்த முயற்சியால், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட ஈச்சிலம்பற்றிற்குட்பட்ட 6 கிராமங்களில் உள்ள 210 குடும்பங்களுக்கு 08.12.2024 (ஞாயிற்றுக்கிழமை) நேரடியாக சென்று நிவாரணம் வழங்கிவைக்கப்பட்டது.
உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நிதி திரட்டி, அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டன.
இந்த செயல்திட்டம் நிவாரண உதவிகளை மட்டுமல்லாமல், சமூக ஒருமைப்பாட்டையும், மனிதாபிமானத்தை முன்னேற்றுவதற்குமான ஒரு செயற்பாடாக மேற்கொள்ளப்பட்டது.
மேலும், இந்த 1998ஆம் ஆண்டு மாணவர்கள் இதற்கு முன்பும் பல்வேறு சமூக சேவைத் திட்டங்களை முன்னெடுத்து வந்துள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1