கிளிநொச்சி, முழங்காவில் பகுதியில் உணவகம் ஒன்றிற்குள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
முழங்காவிலில் உள்ள நள்ளிரவு வரை இயங்கும் உணவகம் ஒன்றிற்குள் நேற்று (9) இரவு 11 மணியளவில் புகுந்த இருவர், அங்கு பணியாற்றிய ஒருவரை கண்மூடித்தனமாக வெட்டியுள்ளனர்.
படுகாயமடைந்த பணியாளர் முழங்காவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1