25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை கிழக்கு

மலேசிய தூதுவருடன் கிழக்கு மாகாண ஆளுனரின் சந்திப்பு

இன்று (10.12.2024 – செவ்வாய் கிழமை) மலேசியாவின் இலங்கைக்கான தூதுவர் பெருந்தகை பத்லி ஹிஷாம் அவர்கள் திருகோணமலை ஆளுநர் செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகராவுடன் சந்திப்பொன்றை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது, ஆளுநரின் தலைமைத்துவத்திற்கு மலேசிய தூதுவர் பாராட்டுகளை தெரிவித்ததோடு, திருகோணமலையை அழகான இடமாகவும், மாபெரும் வளங்கள் கொண்டதாகவும் வர்ணித்தார்.

மேலும், சுற்றுலா மற்றும் மீன்பிடித் துறைகளில் வளர்ச்சியின் அவசியத்தை வலியுறுத்திய அவர் இலங்கையின் அபிவிருத்தி முயற்சிகளுக்கு உதவுவதற்கு நட்பு நாடு என்ற வகையில் மலேசியாவின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

தூதுவரின் கருத்துக்களை ஆளுனர் ரத்னசேகர வரவேற்றதுடன், மலேசியாவின் தொடர்ச்சியான ஆதரவிற்கு நன்றி தெரிவித்தார். தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள சமூகங்கள் சமாதானமாக வாழும் கிழக்கு மாகாணத்தின் தனித்துவமான பல்கலாச்சார நல்லிணக்கத்தை அவர் கோடிட்டுக் காட்டியதுடன், நல்லாட்சி, வெளிப்படைத்தன்மை மற்றும் ஊழல் அல்லது சட்டவிரோத நடைமுறைகளைத் தவிர்ப்பதற்கு தனது நிர்வாகம் உறுதிபூண்டுள்ளதாக ஆளுநர் தூதுவரிடம் உறுதியளித்து கூறினார்.

இந்த சந்திப்பு பரஸ்பர நினைவுச் சின்னங்களை பரிமாறியதுடன் மலேசியா மற்றும் கிழக்கு மாகாணத்துக்கிடையிலான கூடுதல் ஒத்துழைப்பு பகுதிகள் குறித்த கருத்து பகிர்வுடன் நிறைவடைந்தது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Pagetamil

பொதுப்பிட்டியவில் வீடோன்றில் தீப்பரவல்

east pagetamil

யாழில் வெள்ளத்தில் வேலை செய்பவர்களுக்கான அவசர அறிவிப்பு!

Pagetamil

திருகோணமலையில் இடம் பெற்ற கிழக்கு மாகாண இலக்கிய விழா

east pagetamil

Leave a Comment