மத்திய அமெரிக்க நாடான எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 5.6 ரிச்டர் அளவுகளில் பதிவான இந் நிலநடுக்கம் அந்த நாட்டுத் தலைநகா் சென் சால்வடாருக்கு 152 km தொவில் உள்ள கடரோலப் பகுதியில் ஏற்பட்டதோடு, 15.4 km ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது.
இந்த நிலநடுக்கத்தால் நாட்டின் பெரும்பாலான பகுதிகள் குலுங்கினாலும், உயிா்ச் சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. புவித் தகடுகள் ஒன்றுடன் ஒன்று உராயும், ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் பகுதியில் எல் சால்வடாா் அமைந்துள்ளதால் அங்கு நிலநடுக்க அபாயம் மிகவும் அதிகமாகக் காணப்படுகிறது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1