தம்பலகாமத்தில் இருந்து திருகோணமலை நோக்கி காலை 6.10 am, 8.10 am மற்றும் 1.30 pm ஆகிய 3 நேரங்களில் அரச பேரூந்து இயங்க வேண்டி இருந்தாலும் அப் பேரூந்துகள் குறித்த நேரத்தில் புறப்படுவதில்லை என்பதால் அப் பிரதேச மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
திருகோணமலை நகர்ப்புறத்தில் பெறக்கூடிய கல்வி, தொழில் மற்றும் ஏனைய இதர தேவைகளுக்காக வருகை தர வேண்டிய கட்டாயம் காணப்படுவதால் குறித்த நேரத்தில் வருகை தர இயலாமல் அப் பிரதேச வாசிகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
இது குறித்து பொறுப்பான அதிகாரிகளிடம் அழைப்பு விடுத்து வினாவிய பொழுது உகந்த பதில் ஏதும் அளிக்கவில்லை எனவும், தனியார் பேருந்து சேவைக்கு ஆதரவாக அரச பேருந்து செயற்படுவதாகவும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர் கணேசலிங்கம் சிந்துஜன் அவர்கள் தன்னுடைய கண்டனத்தை வெளியிட்டுள்ளார். இதன் காரணமாக மக்கள் பாதிப்படைவதாகவும், உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.