கடந்த 13 வருடங்களுக்கு மேலாக சிரியாவில் போர் நடந்து வரும் நிலையில் 50 வருடங்களாக சிரியாவை ஆண்டு வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவு கண்டுள்ளது. இதில் கடந்த 13 வருடமாக நடக்கும் போர்தான் அங்கே ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சியாக மாறியது.
சிரியாவின் தாரா நகரில் நாட்டின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிராக 2011 இல் மௌவியா சியாஸ்னே எனும் 14 வயது சிறுவனால் வரையப்பட்ட கார்ட்டூன் ஓவியம் சுவர் ஓவியமாக வரையப்பட்டமையே அங்கு உள்நாட்டுப் போர் தூண்டப்பட காரணமாக கருதப்படுகிறது.
மருத்துவப் பின்னணியைக் கொண்ட சிரியா அதிபர் பஷர் அல்-அசாத், அந்நாட்டு அரசை விமர்சனம் செய்து வெறும் 14 வயதுடைய சிறுவனால் கார்ட்டூன் ஓவியம் ஒன்றை வரையப்பட்டு, “எஜாக் எல் டோர், யா டாக்டர் (உங்களின் நேரம் முடிந்துவிட்டது டாக்டர்) என்று அதன் கீழே குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆரம்பத்தில் சிரியாவில் சிறு மோதலாக நடந்து வந்த மக்கள் புரட்சி இந்த ஓவியம் வரையப்பட்ட பின்னர் உள்நாட்டு போராக உருவெடுத்து, உள்ளூர் காவல்துறையால் கண்டறியப்பட்ட இவ் வாசகங்கள், இரகசிய பொலிஸ் மூலம் அதை வரைந்த மௌவியா சியாஸ்னே உள்பட பல சிறுவர்கள் கைது செய்யப்பட காரணமாகவும், அவ்வாறு கைது செய்யப்பட்ட சிறுவர்கள் 26 நாட்கள் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, இறுதியில் உடல் முழுக்க கடுமையான காயத்தோடு உயிருக்கு போராடியபடி வெளியே விடுவிக்கப்பட்டிருந்ததாகவும், இந்நிலைக்கு எதிராகவே மக்கள் போராட்டத்தில் ஈடுபட, அதை தடுக்க என அரசு படைகளை களமிறக்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையே கை மீறி மக்கள் போராட்டமாக மாறி அப்படியே புரட்சியாக உருவெடுக்க காரணம் எனவும் அறியப்பட்டிருந்தது.
இப் போராட்டத்தின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், மக்கள் சிந்திய இரத்தங்கள் நாடு முழுக்க பரவ அதுவே அரசுக்கு எதிராக மிகப்பெரிய போரின் தொடக்கமாக மாறி, சிரியா தலைநகரில் போராளி குழுக்கள் நுழையவும், போராளி குழுக்களிடம் சரண் அடையும்படி வீரர்களுக்கு அந்நாட்டு ராணுவம் உத்தரவு பிறப்பிக்கவும், அதிபர் பஷர் அல் ஆசாத் விமானத்தில் ரகசியமாக தப்பி ஓடவும், இறுதியில் அவரது ஆட்சி கவிழ்க்கப்பட காரணம் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன.
இப் பின்னணியிலேயே 50 வருடங்களாக சிரியாவை ஆண்டு வந்த ஆசாத் குடும்பத்தின் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதென தெரிவிக்கப்படுகிறது.