25.7 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதால் விபரீதமா?: அல்லைப்பிட்டியில் பெண்களுக்கு நேர்ந்த கதி!

யாழ்ப்பாணம், அல்லைப்பிட்டி பகுதியில் வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த தாயையும், மகளையும் தள்ளிவிழுத்தி, கையடக்க தொலைபேசி, பணம் என்பன கொள்ளையிடப்பட்டுள்ளன.

இன்று (9) மாலை இந்த சம்பவம் நடந்தது.

திருட்டில் ஈடுபட்ட இளைஞர்கள் யாழ்ப்பாண பக்கமாக தப்பிச் சென்றுவிட்டனர்.

இந்த பகுதியில் முன்னர் பொலிஸ் சோதனைச்சாவடி அமைக்கப்பட்டிருந்தது. அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதை தொடர்ந்து, வீதியோர பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டன.

பொலிஸ் சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து சட்டவிரோத செயற்பாடுகள் தலைவிரித்தாடுகின்றன. அல்லைப்பிட்டி சோதனைச்சாவடி அகற்றப்பட்டதை தொடர்ந்து, இந்த பகுதியில் பெண்களிடம் அடிக்கடி வழிப்பறி நடந்து வருகிறது.

ஏ9 வீதியில் எழுதுமட்டுவாள், ஆனையிறவு சோதனைச்சாவடிகள் அகற்றப்பட்டதை தொடர்ந்து கால்நடை கடத்தல் உள்ளிட்ட கடத்தல்கள் தீவிரமடைந்துள்ளதாக பல தரப்பினரும் குற்றம்சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

2024 வாக்காளர் பதிவின் அடிப்படையிலேயே உள்ளூராட்சித் தேர்தல்

Pagetamil

ரௌடியை போல நடந்த அர்ச்சுனா: அதிர்ச்சி வீடியோ!

Pagetamil

Pagetamil

Leave a Comment