டமஸ்கஸில் இருந்து தப்பிச்சென்ற சிரியா நாட்டு ஜனாதிபதி பஷர் அல்-அசாத் மொஸ்கோவில் தஞ்சம் அடைந்து உள்ளதாக ரஷ்ய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
கடந்த 2011ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வந்த நிலையில் சில ஆண்டுகளாக பெரிய முறையில் வன்முறை எதுவும் ஏற்படாத நிலையில் கடந்த வாரம் மீண்டும் கிளர்ச்சி எழுந்துள்ளது. 13 வருடங்களாக ஏற்பட்ட இவ் உள்நாட்டு யுத்தத்தில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டுள்ளனர் என ஐக்கிய நாடுகள் அமைப்பு தெரிவித்துள்ளது.
பஷர் அல்-அசாத் தலைமையிலான அரசுக்கு எதிராக கிளர்ச்சியாளர்கள் போரில் ஈடுபட்டு சிரியாவின் தலைநகர் டமஸ்கஸ்ஸை நோக்கி முன்னேறி ஆட்சியைப் பிடித்துள்ளதோடு, இவர்களால் மேற்கொள்ளப்பட்ட கடுமையான தாக்குதல் காரணமாக அரச படைகளும் அங்கிருந்து வெளியேறியுள்ளதாகவும், இதேவேளை இங்கிருந்து தப்பிச் சென்ற சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம் அடைந்துள்ளதாகவும், உலகெங்கிலும் உள்ள சிரியா மக்கள் ஜனாதிபதி பஷர் அல்-அசாத் இன் ஆட்சியின் வீழ்ச்சியை கொண்டாடி வருவதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.