2024ம் ஆண்டில் திருகோணமலை மாவட்ட சாரணர் சங்கத்தின் பெருமைச் சின்னங்களாக விளங்கும் அதிகாரிகளின் அர்ப்பணிப்பு, ஊக்குவிப்பு மற்றும் சேவை என்பவற்றை அங்கீகரித்து தேசிய மட்டத்தில் அவர்களுக்கான தேசியச் சாரணர் விருதுகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்வானது இலங்கையின் பிரதமர் மாண்புமிகு டாக்டர் ஹரிணி அமரசூரியாவின் தலைமையில் அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று (07.12.2024 – சனிக்கிழமை) இடம்பெற்றது.
இதில், அமைப்பின் வளர்ச்சிக்கான நீண்டகால பங்களிப்பிற்காக வழங்கப்படும் மிக உயர்ந்த பாராட்டுப் பதக்கம் திரு. எஸ். தண்டாயுதபாணி மற்றும் திரு. ஆர். ரமணன் அவர்களுக்கும், சாரணர்களின் தலைமைப்பணிகளுக்கான சிறந்த விருது (Silver Lotus) திரு. எஸ். பத்மசீலன் மற்றும் திரு. எஸ். சசிகுமார் அவர்களுக்கும், சிறந்த சேவைகளுக்காக வழங்கப்படும் சாட்சியம் (Letter of Commendation) திரு. ஆர். ஜனோச், திரு. எஸ்.டி. சாஷ்னி, திரு. டி. சிவநாதன் மற்றும் திரு. ஜே. டிஷாந்த் அவர்களுக்கும் வழங்கிவைக்கப்பட்டது.
மேலும், அமைப்பின் சிறப்பு செயலாளர் பணிகளுக்கான Higher Appreciation Award திரு.ஜே.டபிள்யூ.எம். போரம் அவர்களுக்கும், முக்கிய சாதனையை அடைந்தவர்களுக்கு வழங்கப்படும் விருதான Bar to the Medal of Merit திரு. ஆர். சத்தியராஜன் அவர்களுக்கும் வழங்கி கௌவுரவிக்கப்பட்டது.
திருகோணமலை மாவட்டத்தின் சாரணர் இயக்கத்தின் வளர்ச்சிக்கும், சமூக சேவைகளிலும் அவர்களுடைய முக்கிய பங்களிப்புகளுக்கும் ஒரு முக்கிய அடையாளமாக விளங்கியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.