27.9 C
Jaffna
December 12, 2024
Pagetamil
இலங்கை

நாடளுமன்றத்துக்குள்ளும் தொடரும் அர்ச்சுனாவின் பரபரப்பு வித்தை: அநாகரிகமாக நடந்ததாக சபாநாயகரிடம் முறைப்பாடு!

யாழ்.மாவட்ட சுயேட்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்குச் சென்றபோது, ​​ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேராவால் தாக்கப்பட்டதாக தெரிவித்தார்.

இராமநாதன் அர்ச்சுனா ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பி, ​​எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்திற்கு தனது பாராளுமன்ற உரைக்கு ஒதுக்கப்பட்ட நேரம் குறித்து விசாரிப்பதற்காக சென்றதாக கூறினார்.

“பாராளுமன்ற வளாகத்திற்குள் இதுபோன்ற சம்பவங்கள் நடந்தால், நாங்கள் எப்படி தெருவில் நடமாட முடியும்?’ என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் சபாநாயகரிடம் முறைப்பாடு செய்யுமாறு அவைத்தலைவர், அர்ச்சுனாவிற்கு ஆலோசனை கூறினார்.

இதேவேளை, பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா, எதிர்கட்சித் தலைவர்களின் செயலாளருக்கு முன்பாக அநாகரீகமான முறையில் நடந்து கொண்டதுடன், பாராளுமன்றத்திற்குப் புறம்பான வார்த்தைகளை உதிர்த்ததாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சபாநாயகரிடம் புகார் அளித்துள்ளோம் என்றார்.

பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, குற்றச்சாட்டை நிராகரிப்பதாகவும், பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவே தன்னை அச்சுறுத்தியதாகவும் தெரிவித்துள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆசாத் சாலியை கைது செய்தது சட்டவிரோதம்!

Pagetamil

குடிநீர் வசதி இல்லாமல் பத்தனை கிரக்கிலி தோட்ட பிரதேச மக்கள்

east pagetamil

அரிசி இறக்குமதியில் நெருக்கடி

east pagetamil

கடந்த வருடம் எலிக்காய்ச்சலால் 200 பேர் உயிரிழப்பு!

Pagetamil

இன்றைய வானிலை

Pagetamil

Leave a Comment