25.4 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இந்தியா

புதிய காதலியுடன் திருமணம்; லிவ் இன் பார்ட்னரை 40 துண்டுகளாக வெட்டியெறிந்த இறைச்சிக்கடைக்காரன்!

தனது லிவ் இன் பார்ட்னரை 40 துண்டுகளாக வெட்டி எறிந்த கொடூர காதலன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்டில் உள்ள குந்தி மாவட்டத்தில் உள்ள ஜோர்டாக் என்ற கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் நாய் ஒன்று மனித உடல் உறுப்பை இழுத்து வந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் இதுகுறித்து போலீஸாருக்குத் தகவல் கொடுத்தனர். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர். போலீஸார் காட்டுக்குள் என்று விசாரித்தபோது அங்கு பெண் ஒருவர் 40 துண்டுகளுக்கும் அதிகமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உடல் உறுப்புகள் ஆங்காங்கே வீசப்பட்டுக் கிடந்தன.

அதோடு அங்கு ஒரு பேக் கிடந்தது. அந்த பேக்கில் கொலை செய்யப்பட்ட பெண்ணின் ஆதார் கார்டு மற்றும் உடமைகள் இருந்தது. அதனைக் கைப்பற்றி  அது காங்கி குமாரி (24) என அடையாளம் கண்டனர். அப்பெண்ணின் தாயாரிடம் விசாரித்தனர். இதில் அப்பெண் கொலை செய்யப்படுவதற்கு முன்பு தன் தாயாருக்கு போன் செய்து தன் பார்ட்னருடன் வாழ்வதற்காக ரயில் ஏறிச் செல்வதாக குறிப்பிட்டிருந்தார். அதன் அடிப்படையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து அப்பெண்ணின் காதலன் நரேஷ் (25) என்பவரை பிடித்து விசாரித்தபோது அவர் கொலையை ஒப்புக்கொண்டார்.

இது குறித்து போலீஸ் அதிகாரி அமன் குமார் கூறுகையில்,” கொலை செய்யப்பட்ட பெண்ணுடன் நரேஷ் லிவ் இன் முறையில் தமிழ் நாட்டில் வாழ்ந்து வந்தான்.

இருவருக்கும் ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டம். நரேஷ் தமிழ் நாட்டில் சிக்கன் கடையில் கோழி இறைச்சி வெட்டும் வேலை செய்து வந்தான். இடையில் ஊருக்கு வந்தபோது தனது லிவ் இன் பார்ட்னருக்குத் தெரியாமல் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின்னர் தனது மனைவியை சொந்த ஊரில் விட்டுவிட்டு மீண்டும் தனது லிவ் இன் பார்ட்னருடன் தமிழ் நாட்டில் சென்று வாழ்ந்து வந்தார். காதலன் திருமணம் செய்தது தெரியாமல் நரேஷுடன் வாழ்ந்த லிவ் இன் பார்ட்னர் ஊருக்கு திரும்ப வேண்டும் என்று நிர்ப்பந்தம் செய்தார். இதையடுத்து வேறு வழியில்லாமல் தன் காதலியை தனது கிராமத்தில் தனது வீட்டிற்கு அருகில் ஆட்டோவில் அழைத்து சென்றுள்ளார். அங்கு சிறிது நேரம் காத்திருக்கும்படி கூறிவிட்டு வீட்டிற்கு ஆயுதங்கள் எடுத்து வந்துள்ளார்.

பின்னர் காதலியை அருகில் இருக்கும் வனப்பகுதிக்கு அழைத்துச்சென்று பாலியல் வன்கொடுமை செய்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார். அதன் பிறகு வனவிலங்குகள் இருக்கும் காட்டுக்குள் காதலியை 40க்கும் அதிகமான துண்டுகளாக வெட்டி உடல் பாகங்களை காட்டுக்குள் வீசியிருக்கிறான்”என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

நெரிசலில் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ‘புஷ்பா’ படக்குழு சார்பில் ரூ.2 கோடி நிதியுதவி

Pagetamil

“என்னை நானே சாட்டையால் அடித்துக் கொள்வேன், செருப்பு அணிய மாட்டேன்!” – அண்ணாமலை கொந்தளிப்பு

Pagetamil

தமிழக மீனவர்கள் கைது, தாக்குதல் சம்பவம்: மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

Pagetamil

3 கணவர்களிடமும் இயற்கைக்கு மாறான உறவு குற்றச்சாட்டு: பெண் கைது!

Pagetamil

12 இளைஞர்களை காதலித்து ஏமாற்றிய பெண்: 19 வயது இளைஞருடன் ஓட்டம்

Pagetamil

Leave a Comment