யாழ்ப்பாணம், சுதுமலையில் வெள்ளநீரில் ரிக்ரொக் வீடியோ எடுக்க முயன்ற இளைஞர்கள் பயணித்த வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் வீட்டு மதில், தொலைபேசி கம்பம் என்பன சேதமாகின.
நேற்று (26) இந்த சம்பவம் நடந்தது.
சுதுமலை அம்மன் கோயிலை சுற்றிலும் பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இளைஞர்கள் சிலர் வாகனமொன்றில் சென்று, கோயிலை சுற்றியுள்ள வெள்ளத்தில் பயணித்து ரிக்ரொக் வீடியோ பதிவு செய்ய முயன்றுள்ளனர்.
வெள்ளத்துக்குள் சென்று கொண்டிருந்த போது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து, அருகிலுள்ள கோயில் பூசகரின் வீட்டு மதிலையும், தொலைபேசி கோபுரத்தையும் இடித்து தள்ளியுள்ளது.
மானிப்பாய் பொலிசார் வாகனத்தை கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1