ஈ.ப.டி.பி அமைப்பின் வவுனியா மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன், அந்த கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
நேற்று (25) அவர் அனுப்பிய அறிக்கையில் இந்த விபரம் தெரிவிக்கப்பட்டிருந்தது.
அவர் அனுப்பிய அறிக்கை வருமாறு-
ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவது தொடர்பாக…
ஆரம்பத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் (தமிழரசுக் கட்சியில்) ஆரம்பித்த எனது அரசியல் பயணம்,
பின்பு, 2013ம் ஆண்டிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி) உடன் இணைந்து கட்சியின் வவுனியா மாவட்ட நிர்வாகச் செயலாளராக பொறுப்பேற்று மக்கள் பணியாற்றினேன். மேலும், 2020இல் பாராளுமன்ற உறுப்பினராகவும் தெரிவாகினேன்.
தற்போது நடைபெற்ற 2024 பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு கணிசமான வாக்குகளே கிடைக்கப் பெற்றன.
இதுவரை காலமும் ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் பயணித்து மக்கள் சேவையாற்றினேன். சில விடயங்கள் காரணமாக ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியில் இருந்து விலகுகிறேன். இது தொடர்பான கடிதத்தினை, ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் கெளரவ டக்ளஸ் தேவானந்தா அவர்களுக்கு பதிவுத் தபாலில் அனுப்பியுள்ளேன்.
இக் கட்சியில் இருந்து நான் வெளியேறுவதற்கு, கட்சியோ அல்லது கட்சியின் தலைமையோ காரணமில்லை, எனது தனிப்பட்ட முடிவு என்பதை தெரிவித்துள்ளேன்.