கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு நீண்ட காலத்திற்கு பின் புதிய
நோயாளர் நலன்புரிச் சங்கம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.
நேற்று சனிக் கிழமை கிளிநொச்சியில் தனியார் விருந்தகம் ஒன்றில் பிற்பகல்
இரண்டு மணிக்கு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரிச்
சங்கத்தின் புதிய நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
கரைச்சி பிரதேச செயலக மேலதிக பிரதேச செயலாளர், அதன் நிர்வாக
உத்தியோகத்தர், சமூக சேவைகள் உத்தியோகத்தர், கிளிநொச்சி மாவட்ட
வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் ஆகியோரின் பங்குபற்றலுடன் புதிய
நிர்வாகம் தெரிவு செய்யப்பட்டது.
புதிய நிர்வாகத்தில் ஓய்வுப்பெற்ற பிரதி அதிபர் க. விஜயசேகரன்
தலைவராகவும், முன்னாள் அரசியல்துறை போராளி வேங்கை செயலாளராகவும், த.
செல்வராணி பொருளாளராகவும் பளை இராதுரை உப தலைவராகவும், கபிரியல் லோறன்ஸ், உப செயலாளராகவும். பூநகரி துசிகரன், அதிபர் றொபேட் கெனடி, வட்டக்கச்சி
சிறிரங்கநாதன், அம்பாள்குளம் மயில்வாகனம், திலகராஜ், ஆனந்தன் ஆகியோர்
நிர்வாக உறுப்பினர்களாகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.