28.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

150 மி.மீ மழை பொழிய வாய்ப்பு!

வளிமண்டலவியல் திணைக்களம் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகள் மற்றும் நிலப்பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் விடுத்துள்ளது.

இன்று (23) மாலை 04.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிவித்தல் நாளை (24) மாலை 04.00 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியுள்ளது.

இது தொடர்ந்து வளர்ச்சியடைந்து வடமேற்கு திசையில் மேற்கு நோக்கி நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் கடல் பகுதிக்கு அருகே நவம்பர் 25ஆம் திகதிக்குள் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாக வாய்ப்பு உள்ளது.

இது தொடர்ந்து நாட்டின் வடக்கு கடற்கரையை நோக்கி நகரும் என்று நம்பப்படுகிறது.

இந்த முறைமையின் தாக்கத்தினால், நாட்டின் கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ​கேட்டுக்கொண்டுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

அரிசி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் தட்டுப்பாடு நீடிக்கும் – ருவன் செனரத் தகவல்

east tamil

3 வருடங்களுக்கு முன் நிதி மோசடியில் ஈடுபட்ட தம்பதியினர் கைது

east tamil

மின் கட்டண திருத்தம் தொடர்பில் மக்களிடம் கோரிக்கை

east tamil

வவுனியா விபத்தில் யாழ் இளைஞர் பலி

Pagetamil

Leave a Comment