26.2 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

யாழில் சட்டத்தரணி வீட்டில் கொள்ளை: பணிப்பெண்ணும், மற்றொருவரும் கைது!

யாழ்ப்பாணம் – நல்லூர் பகுதியில் சட்டத்தரணியொருவரின் வீட்டில் ஒரு கோடி 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான நகை மற்றும் பணம் பொருட்களை கொள்ளையிட்ட சம்பவம் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

கிளிநொச்சியில் பதுங்கியிருந்த ஒருவரும் குறித்த வீட்டில் பணியாற்றிய பணிப்பெண்ணுமே யாழ்ப்பாணம் பிராந்திய குற்றத் தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் பெண் சட்டத்தரணி ஒருவர் வீட்டில் இல்லாத சமயத்தில் 40 பவுண் நகைகள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன களவாடப்பபட்டது.

சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் உதவி பொலிஸ் அத்தியட்சர் எம்.எஸ்.ஜரூல் வழிகாட்டலில் யாழ்மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சமன் பிறேமதிலக தலைமையிலான குழுவினர் கைது செய்தனர்.

சட்டத்தரணி இல்லாத நேரம் தொடர்பாக பிரதான சந்தேக நபருக்கு வீட்டுப் பணிப்பெண் வழங்கிய தகவலுக்கமைய குறித்த களவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்களை கைது செய்த பொலிசார் மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

ஜனாதிபதி வெளியிட்டுள்ள அதி விசேட வர்த்தமானி

east tamil

கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தியில் பின்னடைவு – சிவஞானம் சிறீதரன்

east tamil

பதுளைக்கு விஷேட ரயில் சேவை

east tamil

அஸ்வெசும நலன்களுக்கு நிலுவைத் தொகை இன்று முதல் வங்கி கணக்குகளில்!

east tamil

Leave a Comment