யாழ் மாவட்டத்திலிருந்து சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினராக தெரிவாகிய வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா, நாடாளுமன்ற உறுப்பினர்களின் சுயவிபர பக்கத்தில், தன்னை பௌத்த மதத்தை பின்பற்றுபவராக குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் தேசியம் குறித்த எந்த புரிதலும் இல்லாமல், அதை வாக்காளர்களை உசுப்பேற்றுவதற்கான ஒரு வழிமுறையாக மட்டுமே பயன்படுத்தியவர் இராமநாதன் அர்ச்சுனா.
எந்த பொதுநோக்கமும், அரசியல் நோக்கமும் இல்லாமல் வெறும் தற்குறித்தனத்தால் மட்டுமே, யாழ்ப்பாண வாக்காளர்களில் ஒரு பகுதினரை மயக்கலாம் என்பதை கடந்த பொதுத்தேர்தலில் அர்ச்சுனா நிரூபித்திருந்தார்.
தலைவர், தமிழன்டா என்ற சில வார்த்தைகளால் புலம்பெயர்ந்த சிலரையும் கைக்குள் வைத்துள்ள அர்ச்சுனா, தற்போது தன்னை பௌத்த மதத்தவர் என குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல் திரட்டில், அர்ச்சுனாவின் மதமாக பௌத்தம் குறிப்பிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறிப்பிடும் விபரங்களே இந்த பக்கத்தில் பதிவேற்றப்படும்.
இந்த விவகாரம் சர்ச்சையானால், நாடாளுமன்ற அலுவலர்கள் தவறுதலாக பதிவிட்டு விட்டார்கள் என அர்ச்சுனா குறிப்பிட்டு, நாடாளுமன்ற செயலகத்தை அணுகி, தனது மதத்தில் மாற்றம் செய்தாலும் ஆச்சரியமில்லை.
இதேபோல, முன்னர் தமிழ் யூடியூப்பர்களிடம் தனது தந்தை விடுதலைப் புலிகளின் காவல்துறையில் முக்கிய பொறுப்பிலிருந்ததாக கூறி வந்தவர், சிங்கள ஊடகத்தில் தனது தந்தை சம்பளத்துக்கு பணியாற்றிய எழுத்தர் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.